Since 1854 |
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)Government Arts College (Autonomous)Re-accredited (II Cycle) with A Grade by NAACAffiliated to Bharathidasan University |
Centre Code 004 |
14-06-2021 அன்று, கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர்களின் சார்பாக 1,68,000/- ரூபாய் நிதி திரட்டி, தமிழ்நாடு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 1,00,000/- ரூபாய்க்கான வங்கி வரைவோலையை, கல்லூரி முதல்வர் துரையரசன் அவர்கள் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களிடம் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, 23 தற்காலிக ஊழியர்களுக்கு ரூபாய் இரண்டாயிரமும் கொரோனாவால் தாயை இழந்த இக்கல்லூரி மாணவி ஒருவருக்கு ரூபாய் ஐயாயிரமும் எஞ்சிய தொகையில் மருத்துவர்கள் மற்றும் காவலர்களுக்கு முக கவசம் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.
14-06-2021 அன்று, கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் அமைந்துள்ள 165 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதான கட்டிடத்தை புனரமைக்கும் பணியை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அருகில், கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.கே.பாஸ்கர் அவர்கள், கல்லூரி முதல்வர் துரையரசன் அவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளனர்.
நமது கல்லூரியில் 2021 ஆண்டு நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் க.துரையரசன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். அதைத்தொடர்ந்து புதுடெல்லியில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் நமது கல்லூரியை சார்ந்த தேசிய மாணவர் படை அதிகாரியாகிய Lt.Dr.A. எட்வர்ட் சாமுவேல் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் இயக்குனரகம் சார்பாக சிறப்பு பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துகொண்டார். இந்திய அளவில் மாநிலங்களின் இடையே நடைபெற்ற போட்டிகளில் நமது இயக்குனரகம் மூன்றாம் இடம் பிடித்தது சிறப்பம்சம். அதனை சிறப்பிக்கும் வகையில் நமது கல்லூரி முதல்வர் அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தல். புதுடெல்லியில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் நமது கல்லூரியைச் சார்ந்த NCC மாணவி T. சந்தியா தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் இயக்குனரகம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய மாணவர் படையின் உயரிய விருதான DG NCC கமெண்டேஷன் கார்டு பெற்றுவந்தார் என்பது சிறப்பு. அவரை சிறப்பிக்கும் வகையில் நமது முதல்வர் அவர்கள் சான்றிதழ் வழங்குதல். சென்னை மெரினாவில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் நமது கல்லூரியைச் சார்ந்த NCC மாணவி A. கிரிஜா கலந்து கொண்டதை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு நமது முதல்வர் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பனையை தேடி ஒரு பயணம் என்ற நிகழ்வினை கல்லுரி முதல்வர் முனைவர் க.துரையரசன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் ஏற்பாடுகளை NSS திட்ட அலுவலர்கள்,கும்பகோணம் எக்ஸ்னோரா அமைப்பினர் மற்றும் NSS மாணவ மாணவிகள் செய்திருந்தனர். இந்நிகழ்சியில் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்