+91-435 2442149 +91-435 2442977
 Institutional Email          gacakum1854@gmail.com

Scholarships - உதவித் தொகை

வ. எண்

உதவித் தொகை

தகுதியுடைய மாணவர்கள்

இசைவு ஆணை அளிப்பவர்

1.

இந்திய அரசுப் படிப்பு உதவித் தொகை SC/ST மாணவர்கள்.

பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்குள் இருக்க வேண்டும்.

மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், தஞ்சை.

2.

பிற்பட்ட வகுப்பினருக்கு உதவித் தொகை (BC).

பிற்பட்ட வகுப்பினர் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்குள் இருக்க வேண்டும்.

பிற்பட்டோர் நல அலுவலர் தஞ்சை.

3.

மிகவும் பிற்பட்டோர், சீர் மரபு வகுப்பினர் நலன் உதவித் தொகை (MBC/DNT) பட்டபடிப்புக்கு.

பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்குள் இருந்தால் இலவச கல்விச் சலுகை வழங்கப்படும்(UG).

பிற்பட்டோர் நல அலுவலர் தஞ்சை.

4.

பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபு வகுப்பினர் நலன் உதவித் தொகை பட்ட மேற்ப்படிப்பு.

பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்குள் இருக்க வேண்டும்.

பிற்பட்டோர் நல அலுவலர் தஞ்சை.

5.

பிற்பட்ட வகுப்பினர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாகப் பயிலும் மாணவர்க்கு இளங்கலைப் படிப்பு வரையில் இலவசக் கல்விச் சலுகை (BC 1st Graduate) .

பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்குள் இருக்க வேண்டும். மாணவரின் பெற்றோரோ உடன் பிறப்புக்களோ இதுவரையில் யாரும் பல்கலைக்கழகப் பட்டம் பெறாதவர்களாக இருக்க வேண்டும்.

பிற்பட்டோர் நல அலுவலர் தஞ்சை.

6.

பள்ளி ஆசிரியரின் பிள்ளைகட்கு உதவித் தொகை

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள்.

கல்லூரிக் கல்வி இயக்குனர், சென்னை-6.

7.

தமிழ்நாடு கல்வி விதி 92வது விதிப்படி உதவித் தொகை (முழுமை ) அல்லது அரைச் சம்பள சலுகை பெறல்.

பிற்பட்ட வகுப்பு, பட்டியல் இனத்தவர்.

முதல்வர்,   அரசு கலைக் கல்லூரி,
கும்பகோணம்

8.

பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.

மத்திய, மாநில அரசு உதவித்தொகை பெற தகுதியில்லாத ஆதிதிராவிட மாணவர் மற்றும் மாணவியர்கள் இச்சலுகையைப் பெறலாம். இதில் சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மட்டும் வழங்கப்படும்.

மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் , தஞ்சை.

9.

முதுகலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி (பெண்களுக்கு மட்டும்).

இத்திட்டத்தின் கீழ் முதுகலை பயிலும் பெண்கள் மற்றும் மத்திய, மாநில, அரசுக் கல்வி உதவித்தொகை பெற தகுதியிழந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ்ப் பயன் பெறலாம். இதில் சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மட்டும் வழங்கப்படும்.

மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் , தஞ்சை.

10.

நடுவண் அரசு தர மதிப்பெண் அடிப்படை.

கல்லூரி பட்ட வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்.

கல்லூரிக் கல்வி இயக்குனர்

11.

உழவர் சமூக பாதுகாப்பு உதவித் தொகை .

விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் இவர்களின் மகன்/மகள்.

சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்துறை.

.