+91-435 2442149 +91-435 2442977
 Institutional Email          gacakum1854@gmail.com

Photo Gallery

Catch the Rain Programme


22-11-2021 அன்று, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில், தஞ்சாவூர் இந்திய அரசு நேரு யுவகேந்திரா சார்பில், விவேகானந்தா கலாம் யூத் கிளப் மற்றும் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து, மழைநீர் சேகரிப்பு – நீர் மேலாண்மை பற்றிய மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் அவர்கள், நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் குத்துவிளக்கை ஏற்றி, கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாக, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) நிறுவன நாள் (168 ஆம் ஆண்டு தொடக்கம்) நினைவுக் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. அரசு கலைக் கல்லூரி முதல்வர் கே.துரையரசன் அவர்கள் தலைமை தாங்கினார். கருத்த்தரங்கின் நோக்கத்தினை பற்றி, நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் எம்.நீலகண்டன் அவர்கள் உரையாற்றினார். விவேகானந்தா யூத் கிளப் தலைவர் எம்.கணேசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வி.ராமசுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை வகித்தார். ஆதலையூர் சூரியகுமார் அவர்கள் மழைநீர் பற்றிய கருத்துரை வழங்கினார். நிகழ்வில், கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.கே.பாஸ்கர் அவர்கள், மாவட்ட பிரதிநிதி டி.என்.கரிகாலன் அவர்கள், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் எல்.ராஜேந்திரன் அவர்கள், பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் அவர்கள், ரெட்கிராஸ் துணை தலைவர் ரோசரியோ அவர்கள், NSS திட்ட அலுவலர்கள் சத்யா அவர்கள், டி.சுவாமிநாதன் அவர்கள், லதா அவர்கள், முருகன் அவர்கள், அருள் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.