Since 1854 |
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)Government Arts College (Autonomous)Re-accredited (II Cycle) with A Grade by NAACAffiliated to Bharathidasan University |
Centre Code 004 |
22-12-2021 அன்று, கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற கணித மேதை ராமானுஜர் அவர்களின் 134 வது பிறந்த நாள் விழா மற்றும் தேசிய கணித நாள் விழாவில், நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கணித மேதை ராமானுஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து,மரகன்று நட்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும், கணித மேதை ராமானுஜர் அவர்கள் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்கள். நிகழ்ச்சியில், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தி.கணேசன் அவர்கள், கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.கே.பாஸ்கர் அவர்கள், மாவட்ட பிரதிநிதி டி.என்.கரிகாலன் அவர்கள், கல்லூரி முதல்வர் முனைவர் துரையரசன் அவர்கள், கணிதத்துறை தலைவர் முனைவர் குணசேகரன் அவர்கள், பேராசிரியர்கள் ரமேஷ் அவர்கள், மீனாட்சிசுந்தரம் அவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.