+91-435 2442149 +91-435 2442977
 Institutional Email          gacakum1854@gmail.com

Youth Red Cross (செஞ்சிலுவை இயக்கம்)

செஞ்சிலுவை இயக்கம் மதம், சாதி, இனம், மொழி , அரசியல் வேறுபாடுகள் இன்றி தன்னலமற்ற முறையில் அனைத்து காலங்களிலும் எல்லாவித மனிதாபிமானச் செயல்களையும் மேற்கொள்வதன் மூலம் அவசர காலங்களில் மனிதத் துன்பங்களைக் களைவதன் மூலம் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இன்று உலகில் 192 நாடுகளில் செஞ்சிலுவை இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தை தோற்றுவித்தவர் ஜீன் ஹென்றி டூனான்ட் என்பவர் ஆவார். இவர் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் ஒரு வணிகக் குடும்பத்தில் 1828 ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் நாள் பிறந்தார். இவர் இளம் வயதிலேயே தொண்டுள்ளம் கொண்டவராக திகழ்ந்தார்.
1859 ஆம் ஆண்டு சால்பெரினா போர் நடைபெற்றது. அப்போரில் காயம் பட்டவர்களுக்கு இவர் மருத்துவம் பார்த்தார். இதன் விளைவாக செஞ்சிலுவை இயக்கம் தோன்றியது. இதன் சேவை காரணமாக நான்குமுறை நோபல் பரிசு பெற்றார்.
செஞ்சிலுவை இயக்கத்தின் ஏழு அடிப்படைக் கொள்கைகள்

  1. மனிதநேயம்
  2. பாரபட்சமின்மை
  3. நடுவு நிலைமை
  4. தனித்தன்மை
  5. தன்னார்வச் சேவை
  6. ஒருமைப்பாடு
  7. உலகளாவியத் தன்மை

இந்தியன் செஞ்சிலுவைச் சங்க தமிழ்நாடு மாநிலக் கிளையின் தலைமை அலுவலகம் சென்னை எழும்பூரில் இயங்கி வருகிறது.  கல்லூரியில் பயிலும் மாணவர்களிடத்தே மனிதாபிமான செயல்பாடுகளை ஊக்குவித்து, சேவைப் பணியில் அவர்களை ஈடுபடுத்தும் முக்கிய அமைப்பு செஞ்சிலுவைச் சங்கம் ஆகும்.
அரசினர் கலைக்கல்லூரி, கும்பகோணத்தில் 1986 ஆம் ஆண்டு பேரா. திருநாவுக்கரசு அவர்களை திட்ட அலுவலராகக் கொண்டு செஞ்சிலுவை சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.  பிறகு பேரா. முத்து நடேசன், பேரா. தமிழ்வாணன் போன்றோர் திட்ட அலுவலர்களாக செயல்பட்டுள்ளனர்.
தற்போது பேரா. செ. காளிமுத்து திட்ட அலுவலராக செயல்பட்டு வருகிறார். இதில் மாணவர்கள் 100 பேர் தன்னார்வத் தொண்டர்களாக உள்ளனர். இதில் 60 மாணவர்களும் 40 மாணவிகளும் அடங்குவர். 50 மாணவர்கள் சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இரண்டு முறை கிராமங்கள் தோறும் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.  குறிப்பாக முகக்கவசம் மற்றும் கைகளை சுத்தப்படுத்த சானிடைசர்கள் போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர்.

Co-ordinator

Dr C N Annadurai, M.A.,M.Phil.,Ph.D.,
Assistant Professor of English,
Government Arts College(Autonomous),
Kumbakonam 612 002.